முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரெளபதி முர்முவுக்கு அ.தி.மு.க ஆதரவு கோரி இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். உடன் அண்ணாமலை சந்திப்பு

வியாழக்கிழமை, 23 ஜூன் 2022      தமிழகம்
annamalai2022-06-23

Source: provided

சென்னை: திரெளபதி முர்முவுக்கு அ.தி.மு.க ஆதரவு கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்து அழைப்பு விடுத்தார்.

சென்னை வானகரத்தில் நேற்று அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 

இந்த கூட்டத்திற்கு பின் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுடன் தங்கள் வீடுகளுக்கு சென்றனர். இதனிடையே, அதிமுக பொதுக்குழு கூட்ட பரபரப்பு அடங்குவதற்குள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு சென்று ஆலோசனை நடத்தினர். அங்கு சிறிது நேரம் ஆலோசனை நடத்திய பின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கும் அண்ணாமலை மற்றும் சிடி ரவி சென்று ஆலோசனை நடத்தினர். 

பொதுக்குழு கூட்ட பரபரப்பு அடங்குவதற்குள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்-ஐ தனித்தனியே சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்-ஐ பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து சந்தித்தது ஏன்? என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ள இந்திய ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளாராக களமிறக்கப்பட்டுள்ள திரெளபதி முர்முவுக்கு அதிமுக ஆதரவு அளிக்கக்கோரியே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜனாதிபதி தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். அவ்வாறு வேட்பு மனுவை தாக்கல் செய்யும்போது கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடன் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதை வலியுறுத்தும் விதத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து