முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இதுதான் கடைசி விம்பிள்டனா? - செரீனா வில்லியம்ஸ் பதில்

புதன்கிழமை, 29 ஜூன் 2022      விளையாட்டு
Serena 2022 06 29

Source: provided

லண்டன் : விம்பிள்டனில் முதல் சுற்றில் தோற்ற செரீனா வில்லியம்ஸ், அடுத்த வருடப் போட்டியில் பங்கேற்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.

காயத்தால் விலகல்...

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றிலேயே பிரபல வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்துள்ளார். பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஒரு வருடத்துக்குப் பிறகு மீண்டும் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கியுள்ளார். 2021 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், 4-வது சுற்றில் தோல்வியடைந்தார். பிறகு முதல் சுற்று ஆட்டத்தின்போது காயம் ஏற்பட்டதால் விம்பிள்டன் போட்டியிலிருந்து விலகினார். 

செரீனா தோல்வி...

இந்நிலையில் விம்பிள்டன் 2022 போட்டியில் முதல் சுற்றில் தரவரிசையில் 113-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் ஹார்மனி டேன்-ஐ எதிர்கொண்டார்.  24 வயது ஹார்மனி டேன், மூன்று மணி நேரம் போராடி 7-5, 1-6, 7-6 (10-7) என்ற செட் கணக்கில் செரீனாவைத் தோற்கடித்தார். 

பதிலளிக்க முடியாது...

இதுதான் செரீனாவின் கடைசி விம்பிள்டனா? இக்கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது., இந்தக் கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியாது. யாருக்குத் தெரியும், நான் எப்போது மீண்டும் வருவேன் என? இப்போது நான் என்ன நினைக்கிறேனோ, அதற்கு மட்டும்தான் நான் திட்டமிடுகிறேன்.  அடுத்ததாக யு.எஸ். ஓபன் போட்டியில் பங்கேற்க ஆவலாக உள்ளேன். அங்குதான் முதல்முதலில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றேன்.

இன்னும் நன்றாகப் பயிற்சியெடுத்து அப்போட்டியில் விளையாட வேண்டும் என்கிற ஊக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தோல்வி என்னை இன்னும் அதிகமாகப் பயிற்சியெடுக்கத் தூண்டுகிறது. மோசமாக நான் விளையாடவில்லை, நூலிழையில் தான் வெற்றியைப் பறிகொடுத்துள்ளேன் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து