முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்கரில் சேர முதன்முறையாக தமிழ் நடிகருக்கு அழைப்பு கெத்து காட்டும் அந்த நடிகர் யார்?

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      தமிழகம்
photo

Source: provided

தமிழ்நாட்டில் உலக அளவில் படங்கள் தயாரிக்கப்பட்டாலும், வசூலை வாரி குவித்தாலும் தங்களுக்கு ஆஸ்கார் விருது கிடைப்பதையே பிறவிப் பயனாக நினைப்பவர்கள் இருக்கிறார்கள். இருந்த போதிலும் ஆஸ்கார் இந்த பக்கம் திரும்பி கூட பார்ப்பதில்லை.

அவ்வாறு முகத்தை கோணிக் கொண்டிருந்த ஆஸ்கரை தமிழகத்தை நோக்கி திருப்ப செய்தவர் இசை அமைப்பாளர் .ஆர்.ரஹ்மான். அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு தமிழ் படங்கள் இறுதி பட்டியல் வரை சென்றாலும்.. ம்கூம் இன்னும் ஆஸ்கார் தமிழகத்தை எட்டி பார்க்கவில்லை. இந்த சூழலில் ஆஸ்கார் உறுப்பினர்கள் அவையில் இடம் பெற தமிழக நடிகர் ஒருவருக்கு முதன்முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாவில் 2 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ள தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர் சூர்யா வுக்குத்தான் அந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை செவ்வாய்க்கிழமை ஆஸ்கர் வெளியிட்டது. அதில் உறுப்பினராக 397 கலைஞர்கள், நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, 2022 குழுவில் இணைவதற்கு ஆஸ்கர் விருத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட 71 பேருக்கும், விருது பெற்ற 15 பேரும் அடங்குவர். அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் 44 சதவீதம் பேர் பெண்கள், 37 சதவீதம் இதுவரை பிரதிநிதித்துவம் பெறாத பிராந்தியத்தை சேர்ந்தவர்கள்.

இந்தியாவிலிருந்து கஜோல், சூர்யா உள்ளிட்ட நடிகர்களும், தயாரிப்பாளர் ரீமா காக்தி, ஆவணப் பட இயக்குநர் ரின்டு தாமஸ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து