முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஸ் ஒலிம்பியாட் வாசகங்கள் பொறிக்கப்பட்ட 15 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2022      தமிழகம்
CM-4 2022 07 01

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, காமராஜர் சாலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி குறித்து விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னத்துடன் பல்வேறு வாசகங்கள்  பொறிக்கப்பட்ட 15 பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி சரித்திர புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியானது 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். கடந்த 9.6.2022 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டிட வளாகத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிக்கான  இலச்சினை  மற்றும் சின்னத்தை முதல்வர் அறிமுகப்படுத்தினார்.

அதன் தொடர்ச்சியாக, சர்வதேச அளவில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் 5 மாநகர பேருந்துகளிலும், வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு செல்லும் 10 பேருந்துகளிலும் செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னத்துடன் நம்ம செஸ், நம்ம பெருமை - இது நம்ம சென்னை, நம்ம செஸ் - வணக்கம் செஸ், வணக்கம் தமிழ்நாடு போன்ற வாசகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்படுகிறது.  

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.எஸ்.சிவசங்கர், மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச்செயலாளர் முனைவர் இறையன்பு, போக்குவரத்துத் துறை முதன்மைச்செயலாளர் கோபால், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச்செயலாளர் அபூர்வா, பொதுத்துறை செயலாளர் முனைவர் ஜகந்நாதன்,  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை செயல் அலுவலர் மற்றும் உறுப்பினர் செயலர் டாக்டர் கே.பி.கார்த்திகேயன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெயசீலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து