Idhayam Matrimony

மைசூரில் தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளருக்கு எதிரான மனு தள்ளுபடி

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2025      இந்தியா
Banu-Mushtaq-2025-09-20

புதுடெல்லி, மைசூரு தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் எச்.எஸ். கவுரவ் என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், "சாமுண்டீஸ்வரி கோவிலில் மைசூரு தசரா விழாவை தொடங்கி வைப்பவர் இந்துவாக இருக்க வேண்டும். ஆனால், இவ்விழாவை தொடங்கிவைக்க அழைக்கப்பட்டுள்ள எழுத்தாளர் பானு முஷ்டாக் முஸ்லிம் என்பதால் இந்து மத பூஜைகளைச் செய்ய முடியாது. இது மரபை மீறுவதாகும். இதனால் இந்துக்களின் உணர்வுகள் புண்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது. அப்போது நீதிபதிகள், அரசமைப்பு சாசன முகப்புரை என்ன சொல்கிறது? அரசு நடத்தும் விழாவில் எப்படி பாகுபாடு இருக்க முடியும்? என்று கேட்டனர்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல், கோவிலுக்குள் நடக்கும் பூஜை மதசார்பற்றதாகி விடாது. பூஜை என்​பது மைசூர் தசரா விழா​வின் ஒரு பகு​தி​யாகும். விழாவுக்கு அழைக்​கப்​படும் நபர் எங்​கள் மதத்​துக்கு எதி​ராக கருத்து தெரி​வித்​துள்​ளார். இது​போன்ற சூழலில் அவரை அழைக்க முடி​யாது என வாதிட்​டார்.

அவரது வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், மைசூரு தசராவை தொடங்கி வைக்க புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து