Idhayam Matrimony

இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2025      இந்தியா
peaus-Ghoyal 2023-07-20

புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு உலக நாடுகள் விதிக்கும் வரிக்கு ஏற்ப பதில் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, இந்திய பொருட்கள் மீது 25% வரி விதித்தார். இது ஆகஸ்ட் 7-ம் தேதி அமலுக்கு வந்தது. அத்துடன், ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25% வரி விதித்தார். இது ஆகஸ்ட் 27-ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்மூலம், இந்திய பொருட்கள் மீது 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.

இதற்கிடையே இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் வர்த்தகத் துறை துணை பிரதிநிதி (தெற்கு மற்றும் மத்திய ஆசியா) பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழுவினர் கடந்த 16-ம் தேதி டெல்லி வந்தனர். இரு தரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைக்கான இந்திய பிரதிநிதியும், மத்திய வர்த்தகத் துறை சிறப்புச் செயலருமான ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழுவினரை லிஞ்ச் குழுவினர் சந்தித்துப் பேசினர்.

இந்நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்வதற்காக வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இன்னும் சில தினங்களில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வர்த்தக பேச்சுவார்த்தைக்காக கடந்த மே மாதம் பியூஷ் கோயல் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது, அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக்கைச் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இம்முறையும் அவர் ஹோவர்ட் லுட்னிக்கைச் சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து