முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2025      விளையாட்டு
PV Chinthu 2024 07 31

Source: provided

சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தென் கொரிய வீராங்கனை செ யங் ஆகியோர் மோதினர்.

 

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செ யங் 21-14 , 21-13 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால் பிவி சிந்து தொடரில் இருந்து வெளியேறினார். 

_______________________________________________________________________________________________

நமீபியா வீரர் மாபெரும் சாதனை

நமீபியா கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே ஜிம்பாப்வே அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜான் பிரைலிங்க் 31 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார்.

ஜிம்பாப்வே பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அவர் வெறும் 13 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் விளாசிய வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் 3-வது இடத்தை ஆஸ்திரியாவின் மிர்சா ஆஷன், துருக்கியின் முகமது பஹத், ஜிம்பாப்வேயின் மருமணி ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். அந்த பட்டியல்: 1. திபேந்திர சிங் அய்ரீ - 9 பந்துகள், 2. யுவராஜ் சிங் - 12 பந்துகள், 3.மிர்சா ஆஷன்/ முகமது பஹத்/மருமணி/ ஜான் பிரைலிங்க் - 13 பந்துகள். பின்னர் ஆடிய ஜிம்பாப்வே 176 ரன்னில் ஆல்-அவுட் ஆகி 28 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இருப்பினும் ஜிம்பாப்வே அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. நமீபியாவுக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

_______________________________________________________________________________________________

5 சிக்சர்களை பறக்க விட்ட முகமது 

8 அணிகள் இடையிலான 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் அபுதாபியில் நடந்த ‘பி’ பிரிவின் கடைசி லீக்கில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மல்லுகட்டின. அடுத்த சுற்றுக்கு (சூப்பர்4) முன்னேற இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக முகமது நபி 60 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா 4 விக்கெட் சாய்த்தார்.

இந்த ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் 79 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து (12.1 ஓவர்) தடுமாறியது. இந்த சூழலில் சிறப்பாக பேட்டிங் செய்த முகமது நபி அணியை காப்பாற்றினார். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் வெல்லாலகே வீசிய கடைசி ஓவரில் (20வது ஓவர்) தொடர்ச்சியாக 5 சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ரன் அவுட் ஆனார். 22 பந்துகளை எதிர்கொண்ட முகமது நபி 6 சிக்சர்களுடன் 60 ரன்கள் அடித்தார்.

_______________________________________________________________________________________________

உலக கோப்பை பாடல் வெளியீடு

பெண்களுக்கான 50 ஓவர் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா நடத்துகிறது. பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடக்கிறது. கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் கொழும்பு ஆகிய நகரங்களில் போட்டி நடைபெற இருக்கிறது. நவம்பர் 2ஆம் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில் இலங்கையுடன் மோதுகிறது. இந்த நிலையில் ஐசிசி உலக கோப்பைக்கான பாடலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இப்பாடலை இந்தியாவின் முன்னணி பின்னணி பாடகியான ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளார். இந்த பாடலுக்கான வீடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது.

தொடக்க விழாவிலும் ஷ்ரேயா கோஷலின் கலைநிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்திய பெண்கள் அணி இதுவரை ஐசிசி கோப்பையை வென்றதில்லை. 2005ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 98 ரன்னில் தோல்வியடைந்தது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற உறுதிப் போட்டிகளில் 9 ரன்களில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து