முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று நேரம், அட்டவணை வெளியீடு

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2025      விளையாட்டு
Afghan 2025-09-19

Source: provided

துபாய் : சூப்பர் 4 சுற்றுக்கான போட்டி நேரம், அட்டவணை, திடல் விவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

8 அணிகள் பங்கேற்ற...

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் உள்பட 8 அணிகள் பங்கேற்ற ஆசியக் கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என நான்கு அணிகள் தேர்வாகியுள்ளன. குரூப் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தானும் குரூப் 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம் அணியும் தேர்வாகியுள்ளன.

சூப்பர் 4 சுற்றுக்கான.... 

குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. ஆனால், குரூப் பி பிரிவில் இந்திய அணி இன்று நடைபெறும் ஓமனுக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறது. ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி ஓமனுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தாலும், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் தொடரும். அதனடிப்படையில் சூப்பர் 4 சுற்றுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. (அனைத்துப் போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.)

ரவுண்ட் ராபின் முறை...

சூப்பர் 4 சுற்றில் உள்ள அனைத்து அணிகளும் தங்களுக்கு ஒவ்வொரு ஆட்டத்தில் ரவுண்ட் ராபிம் முறையில் விளையாடுகின்றன. இதில், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். லீக் சுற்று போலவே இந்தச் சுற்றிலும் வெற்றிபெறும் அணிக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். அட்டவணையில் இரு அணிகள் சரிசமமான நிலையில் இருந்தால் ரன் ரேட் அடிப்படையில் அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும்.

சூப்பர் 4 சுற்றுக்கான அட்டவணை:

1) இலங்கை vs வங்கதேசம் - துபாய்.

2) இந்தியா vs பாகிஸ்தான் - துபாய்.

3) பாகிஸ்தான் vs இலங்கை - அபுதாபி.

4)  இந்தியா vs வங்கதேசம் - துபாய்.

5) பாகிஸ்தான் vs வங்கதேசம் - துபாய்.

6) இந்தியா vs இலங்கை - துபாய்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து