முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம் : மே.இ.தீவுகள் பயிற்சியாளர் நம்பிக்கை

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2025      விளையாட்டு
Darren-Sammy 2025-09-19

Source: provided

கரீபியன் : இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சம்மி தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அணிக்கு எதிராக கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுப்பயணம்... 

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த நிலையில், இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சம்மி தெரிவித்துள்ளார்.

4 பந்துவீச்சாளர்கள்...

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் எந்த ஒரு சூழலிலும் சிறப்பாக செயல்படக் கூடிய நிலையில் உள்ளனர். உலகம் முழுவதும் 6-லிருந்து 8 மீட்டர் வரையிலான லென்த், பந்துவீச்சில் வேலை செய்கிறது. ஆனால், எங்களது அணியில் வித்தியாசமாக பந்துவீசக் கூடிய நான்கு பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஷமர் ஜோசப், ஜேடன் சீல்ஸ், அல்சாரி ஜோசப் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் போன்ற தனித்திறன் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஜேடன் சீல்ஸ் இரண்டு விதமாகவும் பந்தினை ஸ்விங் செய்யும் திறன் கொண்டவர். உயரமாக இருக்கும் அல்சாரி ஜோசப் சிறப்பாக பௌன்சர்களை வீசி எதிரணிக்கு சவாலளிப்பார்.

டெஸ்ட் தொடரை... 

இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றும் திறன் இருக்க வேண்டும். இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் மட்டுமே அவர்களுக்கு நெருக்கடி அளிக்க முடியும். கடந்த ஆண்டு நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அவர்களிடமிருந்து மேற்கிந்தியத் தீவுகள் அணி ஊக்கம் எடுத்துக் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும். இந்திய அணிக்கு எதிராக கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து