முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி 13 பேர் மாயம்: தேடும் பணி தீவிரம்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2022      உலகம்
Itali-Alps 2022-07-05

Source: provided

ரோம் : இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி மாயமான 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

ஐரோப்பாவில் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்று ஆல்ப்ஸ் மலைத்தொடராகும். இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் பரந்து விரிந்து காணப்படுகிறது. சுற்றுலாதளமான இந்த மலைத்தொடரில் மலையேறுதல், பனிச்சறுக்கு உள்ளிட்ட சாகசங்களில் பலர் ஈடுபடுவார்கள்.

இத்தாலி நாட்டில் வழியாக செல்லும் இந்த மலைத்தொடரில், சுமார் 3300 மீட்டர் உயரத்தில் மர்மலாடா என்ற சிகரம் உள்ளது. புன்டா ரோக்கா எனற பகுதி வழியாக இந்த சிகரத்தை அடையலாம். இந்த பகுதியில் பலர் மலையேற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

இந்த நிலையில், புன்டாரோக்கா பகுதிக்கு அருகில் பனிப்பாறை சரிந்து விழுந்தது. மலையேற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் சிலர் அதில் சிக்கி அடித்து செல்லப்பட்டனர். இந்த விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் சடலங்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த பனிச்சரிவில் 13 பேர் மாயமாகியுள்ளனர். மாயமனவர்களை மீட்கும் பணிகளில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகளில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த பனிச்சரிவுக்கு காலநிலை மாற்றமே காரணம் என்றும் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து