முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நூபுர் சர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை மீண்டும் சம்மன்

புதன்கிழமை, 6 ஜூலை 2022      இந்தியா
Nupur-Sharma 2022 07 02

Source: provided

கொல்கத்தா : நபிகள் நாயகம் பற்றி கருத்து தெரிவித்த நூபுர் சர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. 

நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துகளை பேசியதாகக் கூறி பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தையும் இணைத்து விசாரிக்க உத்தரவிடுமாறு கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், நூபுர் சர்மாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட் அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது.

அவரது பேச்சு ஒட்டுமொத்த நாட்டுக்கும் தீவைத்து விட்டதாகவும் நாட்டில் தற்போது நடைபெறும் நிகழ்வுகளுக்கு அவர் மட்டுமே பொறுப்பு என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்துக்கும் நீதிபதிகள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், நூபுர் சர்மா நேரில் ஆஜராக கொல்கத்தா காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே சம்மன் அனுப்பி அவர் ஆஜராகாத நிலையில், வருகிற ஜூலை 11 ஆம் தேதி நார்கெல்டங்கா காவல் நிலையத்தில் ஆஜராக அவருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து