முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் உத்தரவு

புதன்கிழமை, 6 ஜூலை 2022      இந்தியா
Ramnath 2022 02 21

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற மாநிலங்களவை நியமன எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜாவை நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளதை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற மாநிலங்களவையில் 12 நியமன உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறார்கள். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை இளையராஜா பெற்றுள்ளார். 

இந்திய நாட்டின் 2-வது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது கடந்த 2018-ல் இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது.  இளையராஜா தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976-ம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு இளையராஜா அறிமுகமானார்.

மேலும் இந்திய முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா, திரைப்பட இயக்குநர் விஜயேந்திர பிரசாத், கர்நாடகாவின் வீரேந்திர ஹெகடே ஆகியோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாகவுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து