Idhayam Matrimony

தொடர் சரிவில் தங்கம் விலை

சனிக்கிழமை, 15 நவம்பர் 2025      தமிழகம்
Gold 2024-12-13

சென்னை, தங்கம் விலை நேற்றும் சரிந்தது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.190 குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 550-க்கும், சவரனுக்கு ரூ.1,520 குறைந்து, ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ம் தேதி ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுதான் இதுவரை இல்லாத தங்கம் விலை உச்சமாக பார்க்கப்பட்டது. அதன் பின்னர் விலை அதிகரிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், விலை குறையத் தொடங்கியது.

ஒரு கட்டத்தில் அதாவது, கடந்த மாதம் 28-ம் தேதி ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.அதனையடுத்து தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் நிலையும் நீடித்து வந்ததை பார்க்க முடிந்தது. இந்த நிலையில், கடந்த 10-ம்  தேதியில் இருந்து தொடர்ந்து ஏறுமுகத்தை கண்டு வந்தது. நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்திருந்தது. இதன் மூலம் மீண்டும் புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை பயணிக்க தொடங்கிவிட்டதோ? என்று பேசும் அளவுக்கு விலை உயர்வு இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விலை குறைந்து காணப்பட்டது. கடந்த 3 நாட்ளுக்கு முன் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் காலையில் கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம், பிற்பகலில் கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் என மொத்தம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.160-ம், பவுனுக்கு ரூ.1,280-ம் குறைந்து இருந்தது.

தங்கத்தை போல, வெள்ளி விலையும் நேற்று முன்தினம் குறைந்திருந்தது. கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.180-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை சரிந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.190 குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 550-க்கும், சவரனுக்கு ரூ.1,520 குறைந்து, ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் நேற்று குறைந்து விற்பனையானது. இதன்படி கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ. 5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.175-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனையானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து