முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தேர்தலுக்கு முன் பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு ஜே.பி.நட்டா விருந்து

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2022      இந்தியா
JP-Natta 2022-07-08

Source: provided

புதுடெல்லி : ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் முன்னதாக பா.ஜ.க. எம்பிக்களுக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா விருந்து அளிக்கவுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறும். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இதையடுத்து 25-ம் தேதி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய ஜனாதிபதி பதவி ஏற்பார். துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறும்.புதிய துணை ஜனாதிபதி ஆகஸ்ட் 11-ம் தேதி பதவியேற்பார். 

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் முன்னதாக பா.ஜ.க. எம்பிக்களுக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா விருந்து அளிக்கவுள்ளார். இது குறித்து பா.ஜ.க. வட்டாரங்கள் கூறுகையில், 

அனைத்து பா.ஜ.க. லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்களும் வரும் 16-ம் தேதி முன் டெல்லி வந்து சேர கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அன்றிரவு பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவருக்கும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா விருந்து அளிக்கவுள்ளார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து