முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உதய்க்கு தங்க செயின் பரிசளித்த போனி கபூர்

திங்கட்கிழமை, 11 ஜூலை 2022      சினிமா
Boney-Kapoor 2022 07-11

Source: provided

மே 22ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுவரும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் 50 வது நாள் வெற்றி விழா  சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு தங்கச் செயினை பரிசளித்தார். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அருண்ராஜா காமராஜ் “நெஞ்சுக்கு நீதி படத்தை நான் பேசுவதை விட மக்கள் பேசவேண்டும் என்று நினைத்தேன். இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். உதயநிதியுடன் இணைந்து பண்ணும் முதல் படம் இதுவாகும். ஒரு சமூக நீதி அடங்கிய ஒரு படத்தை தமிழில் செய்திருப்பது பெருமையாக இருக்கிறது” என்றார். படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “படத்தின் வெற்றிக்கு இயக்குநர்தான் காரணம். ஷூட்டிங்கில் நிறைய டேக்குகள் எடுத்தீர்கள். சிரிக்கக் கூடாது, கண்சிமிட்ட கூடாது என்றெல்லாம் கூறினீர்கள். ஒவ்வொரு இயக்குநரும் ஒவ்வொரு மாதிரி படத்தை இயக்குகிறார்கள். அருண்ராஜா சிறப்பாக இந்தப் படத்தை இயக்கினார். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி” என்றார் உதயநிதி ஸ்டாலின்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து