முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலைமறந்தவன் விமர்சனம்

திங்கட்கிழமை, 18 ஜூலை 2022      சினிமா
Stasmarandavan-review 2022

Source: provided

மலையாளத்தில் டிரான்ஸ் என்கிற பெயரில் வெளியான படத்தின் தமிழ் மாற்றம்தான் நிலைமறந்தவன் படம். படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஃபகத்பாசில், தன் அசுர நடிப்பின்மூலம் அனைவரையும் கவர்ந்திழுக்கிறார். காட்சிக்குக் காட்சி அவர் காட்டும் மாற்றங்கள் சிறப்பு. நாயகியாக அவர் மனைவி நஸ்ரியாவே நடித்திருக்கிறார், சில காட்சிகளில் வந்து போனாலும் குறும்புத்தனம் கலந்த நடிப்பில் ரசிகர்களை ஈர்க்கிறார். வில்லன்களாக நடித்திருக்கும் கவுதம்மேனன், செம்பன் வினோத் ஆகியோர் பயமுறுத்துகிறார்கள். அமல்நீரத் அழகான ஒளிப்பதிவைச் செய்திருக்கிறார், ஜாக்சன் விஜயன், சுஷின்ஷியாம் ஆகியோரின் இசையும் படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது. தமிழில் வசனங்கள் எழுதியிருக்கும் சர்வம் கிருஷ்ணார்ப்பணம், மதங்கள் மீது அளவு கடந்து நம்பிக்கை வைப்பது ஆபத்து என்பதை உணர்த்தியிருக்கிறார். இயக்குநர் அன்வர் ரஷீத், கிறித்துவ மதத்தில் நடக்கும் குற்றங்களை வெளிப்படுத்த இஸ்லாமியரான ஃபகத் பாசிலைப் பயன்படுத்தி தன்னை தற்காத்துக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து