முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

திங்கட்கிழமை, 18 ஜூலை 2022      சினிமா
Varalakshmi 2022 07-18

Source: provided

சென்னை : நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

போடா போடி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் இவரின் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான தாரைதப்பட்டை படம் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல அடையாளத்தை தந்தது. இந்நிலையில், நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக ஒரு வீடியோ பதிவின் மூலம் அவர் அறிவித்துள்ளார். 

அதில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் அனைவரையும் முககவசம் அணியும் படி நடிகர்கள் வலியுறுத்த வேண்டும்.

ஏனென்றால் நடிகர்கள் ஆகிய நாம் படப்பிடிப்பின் போது முககவசம் அணிய முடியாது. சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் தயவு செய்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள், கவனமாக இருங்கள், முக கவசம் அணியுங்கள் என்று வரலட்சுமி சரத்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து