முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நூபுர் சர்மாவைக் கைது செய்வதற்கு இடைக்காலத்தடை: சுப்ரீம் கோர்ட்

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2022      இந்தியா
Nupur-Sharma 2022 07 02

நூபுர் சர்மாவைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்துள்ளது சுப்ரீம் கோர்ட்.

நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துகளை பேசிய பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவால், நாடு முழுவதும் பல இடங்களில் கலவரம் வெடித்தது.  கலவரத்தில் அரசு சொத்துகள் சூறையாடப்பட்டது. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நூபுர் சர்மாவை ஆதரித்த கன்னையா லால் என்கிற தையல் கடைக்காரர் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

அதன்பின், நூபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் இந்தியா முழுவதும் தனக்கு எதிராகப் பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் தில்லிக்கு மாற்ற வேண்டும் என்றும் மற்ற மாநிலங்களில் தன் மீது பதியப்பட்ட வழக்குத் தொடர்பாக கைது செய்யக்கூடாது எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நுபுர் சர்மாவின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல்கள் இருப்பதாக அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணீந்தர் சிங் தெரிவித்தார். இதனைக் கருத்தில் கொண்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நூபுர் சர்மா தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் குறித்து மற்ற மாநிலங்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் அவரைக் கைது செய்ய இடைக்காலத் தடையையும் வழங்கி உத்தரவிட்டுள்ளனர். 

இதற்கிடையே நூபுர் சர்மாவை கொலை செய்ய பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய நபரைக் கைது செய்து புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தில், இந்திய - பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக நூபுர் சர்மாவை கொலை செய்ய ஊடுருவிய பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலனாய்வுத் துறை உள்ளிட்ட முக்கிய அமைப்பின் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்துமல்கோட் எல்லைப் பகுதியில் ஜூலை 16 இரவு 11 மணியளவில் இந்த நபர் கைது செய்யப்பட்டார். ரோந்து குழு, சந்தேகத்தின் அடிப்படையின் இவரை சோதனையிட்டதில், 11 இன்ச் நீள கத்தி, மத புத்தகங்கள் உள்ளிட்டவை இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், இவரின் பெயர் ரிஸ்வான் அஷ்ரப் என்றும், பாகிஸ்தானின் வடக்கு பஞ்சாபில் அமைந்துள்ள மண்டி பஹவுதீன் நகரைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், நபிகள் நாயகத்திற்கு எதிராக கருத்து கூறிய நூபுர் சர்மாவை கொலை செய்ய ஊடுருவியது தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து