முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீம் பாய்ஸ் விமர்சனம்

சனிக்கிழமை, 23 ஜூலை 2022      சினிமா
Meme-Boys-Review 2022-07-23

Source: provided

ஆதித்யா பாஸ்கர், சித்தார்த் பாபு, ஜெயந்த், நம்ரிதா, குரு சோமசுந்தரம், படவா கோபி மற்றும் நிகில் நாயர் உட்பட பலர் நடித்து தற்போது வெளியாகியுள்ள வெப் தொடர் தான் மீம் பாய்ஸ். இயக்குனர் அருண் கௌஷிக் இயக்கியிருக்கும் இத்தொடரை ரெயின்ஷைன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. 96 திரைப்படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்தவர் ஆதித்யா பாஸ்கர். இவர் இந்த மீம் பாய்ஸ் வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த தொடருக்கு, கோபால் ராவ் இசை அமைத்துள்ளார். சோனி லிவ் ஒரிஜினல் தளத்தில் இந்தத் தொடர் வெளியாகியுள்ளது. கதை, ஒரு கல்லூரியில் 4 மாணவர்கள் ஒன்று சேர்ந்து கல்லூரி தாளாளரை கலாய்த்து ஒரு மீம்சை வெளியிடுகிறார்கள். இது அவரது திறமைக்கு விடுக்கப்பட்ட சவாலாக நினைத்துக்கொண்டு, அந்த 4 மாணவர்களையும் கண்டுபிடிக்க கடும் முயற்சி செய்கிறார். ஆனாலும், அவரால் அந்த மாணவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை. இறுதியில், அவர்களை கண்டுபிடிக்க முடிந்ததா இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ். தொடர் முழுவதிலும் விறுவிறுப்பு பரபரப்பு. அடுத்து என்ன நடக்கும் என்ற பலத்த எதிர்பார்ப்பு. குரு சோமசுந்தரத்தின் நடிப்பு பிரமாதம். கிளைமாக்ஸ் எதிர்பாராது. இன்றைய தலை முறையினர் தொழில் நுட்பத்தில் தங்களை காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதனை உரக்கச் சொன்ன மீம் பாய்சு டீமுக்கு எமது பாராட்டுக்கள். மொத்தத்தில் மீம் பாய்ஸ் தொடர் அனைத்து வயதினரும் பார்த்து ரசிக்கும் படியாக உருவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து