முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      இந்தியா
Idukki-Dam 2022-08-07

Source: provided

திருவனந்தபுரம் : அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் கேரளாவின் இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பின. இதுவரை அங்கு 22 அணைகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் உள்ள இடுக்கி அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 2,382.53 அடியாக உயர்ந்தது. மேலும் மழை தொடர்ந்தால், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் அகஸ்டின் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்ததால், இடுக்கி அணையின் கரையோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு, அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இடுக்கி அணையின் 3-வது ஷட்டர் வழியாக 70 செண்டி மீட்டர் மதகு உயர்த்தப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெரியாறு ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து