முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சற்று குறைந்தது தினசரி பாதிப்பு: இந்தியாவில் 15,815 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2022      இந்தியா
India-Corona 2022 01 12

Source: provided

புதுடெல்லி : நாட்டில் சற்று குறைந்து பதிவாகியுள்ளது தினசரி பாதிப்பு. இந்தியாவில் 15,815 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 815 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 16,561 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, நேற்று 15,815 ஆக குறைந்துள்ளது.

ஒரே நாளில் 20,018 பேர் குணமடைந்ததால் இந்தியாவில் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 4,35,93,112 ஆனது.நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,23,535 லிருந்து 1,19,264 ஆக குறைந்துள்ளது.

கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக பதிவானது. இந்தநிலையில், நேற்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 5 லட்சத்து 26 ஆயிரத்து 996 பேர் இறந்துள்ளனர்.

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2,07,71,62,098 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 24,43,064 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர இளமை சுறுசுறுப்புடன் வாழுவதற்கு | உடல் உஷ்ணத்தை தணிக்க | முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | உடல் பலவீனம் நீங்க சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள் பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு
View all comments

வாசகர் கருத்து