முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100-வது ஆண்டு சுதந்திர தின விழா நடக்கும் போது 100 சதவீதம் தன்னிறைவு பெற்ற இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      தமிழகம்
RBU 2022-08-01

Source: provided

திருமங்கலம் : நூறாவது ஆண்டு சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றும்போது உணவு கல்வி விஞ்ஞானம் பல்வேறு துறைகளில் 100 சதவீதம்  தன்னிறைவு பெற்ற இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் மாணவர்கள் மத்தியில் பேசினார். 

இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செக்கானூரணி மற்றும் சாத்தங்குடி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவ மாணவிகளுக்கு தேசியக் கொடிகளை வழங்கி சுதந்திர தின விழா வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை நேரில் வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் பேசுகையில்,  

75-வது சுதந்திர தின விழா முடிந்து நூற்றாண்டு கொண்டாடும் போது உலகை தலைமை தாங்குற நிலையை உருவாக்குவோம். இந்தியாவிலிருந்து வருகிறோம் என்றால் மரியாதையோடு நம்மை பார்க்கிற நிலைமையை நாம் உருவாக்கியுள்ளோம்.  நூறாவது ஆண்டு சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றும்போது உணவு கல்வி விஞ்ஞானத்தில் என்ன பல்வேறு துறைகளில் 100 சதவீதம் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும். அதற்கு உங்களுடைய பங்களிப்பு மகத்தான பங்களிப்பாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வுகளில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட  துணைச் செயலாளர் வக்கீல் தமிழ்ச்செல்வம், பொருளாளர் வக்கீல்.திருப்பதி, திருமங்கலம் ஒன்றிய செயலாளர் வக்கீல்.அன்பழகன்,அம்மா பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன், மீனவரணி மாவட்ட செயலாளர் சரவணபாண்டி, மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், சிவ சுப்ரமணியன், நிர்வாகிகள் ஆண்டிச்சாமி, சுமதி சாமிநாதன், ஜெயமணி,பேரவை பாண்டி, சிவஜோதி தர்மர், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து