முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் அவசரநிலை நீட்டிக்கப்பட மாட்டாது : அதிபர் ரணில் விக்ரமசிங்கே தகவல்

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      உலகம்
Ranil 2022-08-17

Source: provided

கொழும்பு : இலங்கையில் அவசர கால சட்டம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்கு உள்ளான மக்கள் மிகப் பெரும் புரட்சியில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடிய அவர்கள், அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்தனர். எனினும் பின்னர் அந்த கட்டிடங்களில் இருந்து படிப்படியாக அவர்கள் வெளியேறினர். 

இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே வெளி நாட்டுக்கு தப்பி சென்றார். இலங்கையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே கடந்த மாதம் 21-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தது. இதையடுத்து இலங்கையில் அவசர நிலையை பிரகடனப் படுத்துவதாக ரணில் விக்ரம சிங்கே அறிவித்தார். 

மேலும் அதிபர் மாளிகை எதிரே காலி முகத்திடலில் இருந்த போராட்டக்காரர்கள் கூடாரங்கள் அகற்றப்பட்டன. இதற்கிடையே காலி முகத்திடலில் இருந்து வெளியேறுவதாக போராட்டக்காரர்கள் அறிவித்தனர். இதற்கிடையே ரணில் விக்ரமசிங்கே பிறப்பித்த அவசர நிலை இன்றுடன் காலாவதியாகிறது. இந்த நிலையில் அவசர நிலை வாபஸ் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிபர் அலுவலகம் தரப்பில் கூறியிருப்பதாவது, 

நாட்டின் நிலைமை நிலையான வகையில் இருப்பதால் அரசுக்கு எதிராக போராட்டங்களை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அவசர கால சட்டம் நீட்டிக்கப்பட மாட்டாது. அவசர கால சட்டம் காலாவதியாகும் நிலையில் மீண்டும் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது. அதிபர் ரணில் விக்ரசிங்கே அவசர கால சட்டம் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும். தற்போது நாடு, ஸ்திரமான நிலையில் இருப்பதால் அவசரகால சட்டத்தை நீடிக்க வேண்டிய அவசிய மில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து