முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ராணுவ அமைச்சருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      உலகம்
Lloyd-Austin 2022-08-17

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க ராணுவ அமைச்சருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் அதிகமாக பரவி வருகிறது. அந்த நாட்டின் அதிபர் ஜோ பைடன் கடந்த மாதம் 10 நாட்கள் இடைவெளியில் 2 முறை கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளானார். இந்த நிலையில் அமெரிக்காவின் ராணுவ அமைச்சரான லாயிட் ஆஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 69 வயதான லாயிட் ஆஸ்டின் தனக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அடுத்த 5 நாட்கள் வீட்டில் இருந்து பணியாற்ற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆஸ்டின் 2-வது முறையாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். இதற்கு முன் கடந்த ஜனவரி மாதம் அவருக்கு தொற்று உறுதியானது. ஆஸ்டின் பூஸ்டர் உள்பட கொரோனா தடுப்பூசியின் 3 டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து