எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா, திரிணமூல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு, ஆட்சிக்கு பா.ஜ.க. வந்தால்தான் மேற்கு வங்கத்தின் வளர்ச்சி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நாட்டின் முதல் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் மோடி நேற்று (ஜன. 17) தொடக்கி வைத்தார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், மேற்கு வங்கம், நன்மதிப்புடன் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களால் சூழப்பட்டுள்ளது. கிழக்கிந்திய மாநிலங்களை வெறுப்பு அரசியலில் இருந்து பா.ஜ.க. விடுவித்துள்ளது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்குப் பிறகு, தற்போது மேற்கு வங்கத்திலும் அதற்கான நேரம் வந்து விட்டது. மேற்கு வங்க மக்களுக்கான உண்மையான மாற்றத்தினை என்னால் உணர முடிகிறது. மாற்றம் வேண்டுமென்றால், பா.ஜ.க. அரசு வரவேண்டும். இந்திய மக்கள், குறிப்பாக ஜென் ஸீ தலைமுறையினர், பா.ஜ.க.வின் தலைமை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.
வரவிருக்கும் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை வழங்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன். கேரளத்தின் திருவனந்தபுரத்தில் பா.ஜ.க. மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு காலத்தில் வெற்றிபெற முடியாத பகுதிகளிலும்கூட பா.ஜ.க. மீதான ஆதரவு அதிகரித்து வருகிறது" என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


