முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனக்கு 3 வகை கிரிக்கெட் போட்டிகளும் முக்கியம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பதில்

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
rohith-sharma-2022-08-18

Source: provided

ஹராரே: எனக்கு 3 வகை கிரிக்கெட் போட்டிகளும் முக்கியம்  என்று தெரிவித்துள்ள இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட் முடிந்துவிட்டதாகத் தான் நினைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

ஸ்டோக்ஸ் ஓய்வு...

பிரபல இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். இதையடுத்து மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளில் எதற்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும், போட்டி அட்டவணை எப்படி அமையவேண்டும் என்கிற விவாதம் உருவாகியுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் இழுவையாக, சுவாரசியமின்றி உள்ளதாகத் தற்போது பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

கூற மாட்டேன்...

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் அழிவதாக எண்ணுகிறீர்களா என ஒரு பேட்டியில் கேட்கப்பட்டதற்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது., அது எந்த வகையாக இருந்தாலும் கிரிக்கெட் எனக்கு முக்கியம். ஒருநாள் கிரிக்கெட்டோ, டி-20-யோ, டெஸ்ட் கிரிக்கெட்டோ முடிவுக்கு வருகிறது என எப்போதும் கூற மாட்டேன். 

தனிப்பட்ட முடிவு...

புதிதாக இன்னொரு வகை கிரிக்கெட் இருந்தாலும் நல்லது. கிரிக்கெட்டில் ஈடுபடுவது தான் எனக்கு முக்கியம். சிறுவயது முதல் இந்தியாவுக்காக விளையாடுவதே பெரிய கனவாக இருந்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் நாம் எப்போது விளையாடினாலும் மைதானம் நிரம்பி இருக்கும். மக்களின் ஆர்வம் எப்போதும் போல் உள்ளது. எந்த வகை கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது தனிப்பட்ட முடிவு. எனக்கு மூன்று வகை கிரிக்கெட்டும் முக்கியம் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து