முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கும் விரைவில் கட்டணம் வசூல்? - ரிசர்வ் வங்கி முன்மொழிவால் பயனர்கள் அதிர்ச்சி

சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2022      இந்தியா
Reserve-Bank 2022-08-20

Source: provided

புதுடெல்லி : கட்டணம் இல்லாத யு.பி.ஐ. சேவை என்ற விதியில் விரைவில் மாற்றம் ஏற்படவிருக்கிறது. ஒவ்வொரு யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கும் விரைவில் கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி வழங்கிய முன்மொழிவால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் முதன்முறையாக யு.பி.ஐ. சேவை வசதி, 2016ம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது. கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவை, இப்போது இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் யு.பி.ஐ. மூலம் 600 கோடி பரிவர்த்தனை நடந்து சாதனை படைத்துள்ளது. இதைப் பயன்படுத்த பயனருக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. இதனால் யு.பி.ஐ. சேவையை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கட்டணம் இல்லாத யு.பி.ஐ. சேவை என்ற விதியில் விரைவில் மாற்றம் ஏற்படவிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி யு.பி.ஐ. பரிவர்தனைகளுக்கு கட்டணங்கள் வசூலிப்பது குறித்து பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களைக் கோரியுள்ளது. பயனர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக பயனர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு யு.பி.ஐ. நிதிப் பரிவர்த்தனைக்கும் கட்டணத்தைச் வசூலிப்பது குறித்து வங்கி ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.

இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்மொழிவில், "யு.பி.ஐ. என்பது ஐஎம்பிஎஸ் போன்றது. எனவே, ஐஎம்பிஎஸ் இல் உள்ள கட்டணங்களைப் போலவே யு.பி.ஐ. பணப்பரிவர்தனைகளுக்கு கட்டணங்கள் இருக்க வேண்டும். வெவ்வேறு தொகை வரம்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட கட்டணம் விதிக்கப்படலாம் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து