முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் முதுநிலை படிப்புக்கான கலந்தாய்வுக்கு தடையில்லை சுப்ரீம் கோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2022      இந்தியா
supreme-court 2022-08-29

Source: provided

புதுடெல்லி: நீட் முதுநிலை படிப்புக்கான கலந்தாய்வுக்குத் தடையில்லை என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. 

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்த ஜூன் 1-ம் தேதி வெளியானது. தொடர்ந்து, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வுக்கான விடைத்தாள், வினாத்தாளை வெளியிடாத மருத்துவ தேசிய தேர்வு வாரியத்தின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை பட்டியலிட மனுதாரர் கோரினர். 

இந்த விசாரித்த சுப்ரீம் கோர்ட், நீட் முதுநிலை கலந்தாய்வுக்குத் தடையில்லை என  தெரிவித்துள்ளது. மேலும் 'மாணவர்களின் வாழ்க்கையை ஆபத்தில் கொண்டு செல்ல விரும்பவில்லை. அதில் நாங்கள் தலையிட மாட்டோம். திட்டமிட்டபடி கலந்தாய்வு நடக்கட்டும், அதனை நிறுத்த வேண்டாம்' நீதிபதி சந்திரசூட் அமர்வு கூறியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து