Idhayam Matrimony

காலை சிற்றுண்டி திட்டம்: மன்னார்குடி பள்ளி பொறுப்பாளரிடம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      தமிழகம்
CM-2 2022--09-23

Source: provided

சென்னை : காலை சிற்றுண்டி உணவு திட்டம் குறித்து மன்னார்குடி நகராட்சி மாதிரி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பொறுப்பாளர் ஆகியோரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். 

 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 15-ம் தேதி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தினமும் பல்வேறு விதமான சிற்றுண்டி வகைகள் வழங்கப்படுகின்றன.

இந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க சி.எம்.13எப்.எஸ். என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்வரே இதனை நேரடியாக கண்காணிக்கும் வகையில் இந்த செயலி உள்ளது. 

இந்நிலையில், காலை சிற்றுண்டி திட்ட ஆய்வுக் கூட்டத்தின் போது, இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படும் விவரங்கள் குறித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி மாதிரி தொடக்கப் பள்ளியின் காலை உணவு வழங்கும் பொறுப்பாளர் மணிமேகலையிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். அவர் பேசுகையில், 

இன்று பள்ளியில் எத்தனை பேர் சாப்பிட்டாங்க. சரியான நேரத்தில் சாப்பாடு வந்ததா? பசங்க எல்லாரும் சாப்பிட்டாங்களா? இடையில் ஏதும் பிரச்சினை ஏதும் இருக்கா என பேசினார். அதனை தொடர்ந்து பள்ளியில் தலைமை ஆசிரியரிடமும் இது குறித்து கேட்டறிந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து