முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2025      தமிழகம்
CM 2024-12-21

சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் அவர் மாணவர்களின் வெற்றிக்கு ஆசிரியர் காரணம் என சொல்வதுதான் மிகப்பெரிய விருது, மாணவர்களிடம் எதையும் அன்புடன் சொல்லுங்கள், அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சாதி உணர்வு, பாலின பாகுபாடு, போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் ஆசிரியர்களுக்கு அறிவுறை வழங்கியுள்ளார்.

அறிவாற்றலை வளர்க்க.... 

சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், எதுவானாலும் கூகுள், செய்யறிவிடம் (ஏஐ) கேட்டுக் கொள்ளலாம் என மெத்தனத்தில் இருந்துவிடக் கூடாது. மாணவர்களின் சிந்தனையை தூண்டி, அறிவாற்றலை வளர்க்க வேண்டும். தொழில்நுட்பம், மனித சந்ததிக்கான வேறுபாட்டை புரிய வைக்க வேண்டும். இலக்கியங்கள், பொது அறிவு, சமூக ஒழுக்கம், சுற்றுச்சூல் குறித்து புரிய வைக்க வேண்டும்.

உள்கட்டமைப்பு தரம்... 

மாணவர்களுக்கு எந்தளவு அறிவாற்றல் முக்கியமோ உடல்நலமும் முக்கியமும். மாணவர்களின் குடும்ப சூழல், பின்புலம் அறிந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். நீங்கள்தான் இரண்டாவது பெற்றோர். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு கல்வி சூழலில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமையின் அடையாளமாக உயர்ந்து வருகின்றனர். பள்ளிகளின் உள்கட்டமைப்பு தரம் உயர்ந்துள்ளது. மாணவர்களுக்கு சாதி உணர்வு, பாலின பாகுபாடு, போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.

அன்புடன் சொல்லுங்கள்...

சமத்துவம், சமூக நீதி தேவை பற்றி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். எதற்கு, எப்படி? என கேட்கும் பகுத்தறிவு மிக்க தலைமுறையாக மாணவர்களை உருவாக்க வேண்டும். புதுப்புது முயற்சியை எடுக்க வேண்டும். அதன் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றியமைக்க வேண்டும். மாணவர்களிடம் எதையும் அன்புடன் சொல்லுங்கள். அவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்காதீர்கள். மாணவர்களுக்குத்தான் ஆசிரியக் பாடம் எடுப்பார்கள். ஆசிரியர்களுக்கே படம் எடுத்தவர் அமைச்சர் அன்பில் மகேஸ். ஆசிரியர்கள் பாடங்களை மட்டும் அல்ல கல்வியுடன் அனுபவத்தையும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பவர்கள். மாணவர்களின் சிந்தனையை தூண்டி, அறிவை மேம்படுத்த வேண்டியது நமது கடமை என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து