எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தை தேர்வு செய்வதற்கு வருகிற 30-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
எனவே இந்த காலக்கெடு முடிவதற்குள் ஊழியர்கள் அந்த திட்டத்தை தேர்வு செய்யுமாறு மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது. கடைசி நேர நெருக்கடியை தவிர்ப்பதற்காக 30-ந்தேதிக்கு முன்னதாகவே திட்டத்தை தேர்வு செய்யவும், அவர்களின் கோரிக்கை சரியான நேரத்தில் செயலாக்குவதை உறுதி செய்யவும் கேட்டுக்கொண்டு உள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை சேர்ந்த ஊழியர்கள் இந்த தேதிக்குப்பிறகு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை கோர முடியாது என்றும் கூறியுள்ளது. பல்வேறு காரணங்களால் ஒருங்கிணைந்த ஒய்வூதிய திட்டத்தை ஆன்லைன் வழியாக தேர்வு செய்ய முடியாதவர்கள், மேற்படி காலக்கெடுவுக்குள் தங்களுக்கு சம்பந்தப்பட்ட பொறுப்பு அலுவலகத்தில் முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தை நேரடியாக சமர்ப்பிக்கலாம் என்றும் நிதியமைச்சகத்தின் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


