முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2025      உலகம்
Trump

வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக கடந்த ஜனவரி 20-ந்தேதி ட்ரம்ப் பொறுப்பேற்று கொண்ட பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அரசாங்க செலவினங்களை குறைப்பதற்காக எலான் மஸ்க் தலைமையில் புதிய துறையை உருவாக்கினார். சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அமெரிக்காவின் பொற்காலம் மீட்கப்படும் வகையிலான நடவடிக்கையை எடுப்பேன் என தெரிவித்த அவர், சீனா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடுமையான வரி விதிப்புகளை அமல்படுத்தி உத்தரவிட்டார்.

இதேபோன்று, அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் 30 நாட்களுக்கு மேல் தங்கினால் அவர்கள் அரசிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறையையும் அறிமுகப்படுத்தினார். சட்டவிரோத குடியேறிகளை ராணுவ விமானம் உதவியுடன் அவர்களுடைய சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பினார். இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். இந்தியாவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியுடன் கடந்த ஆகஸ்டு 27-ந்தேதி, கூடுதலாக 25 சதவீத வரி என மொத்தம் 50 சதவீத வரி விதிப்பை அறிவித்து அமல்படுத்தினார்.

இதனால், இந்திய ஏற்றுமதி சந்தை ஜூன் தொடங்கி ஆகஸ்டு வரையிலான 3 மாதங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான அறிவிப்பு ஒன்றை ட்ரம்ப் வெளியிட்டு உள்ளார். 

இதன்படி, எச்1-பி விசாக்களுக்கான கட்டணம் 1 லட்சம் டாலர் அளவுக்கு உயர்த்தப்படுகிறது. வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில், வர்த்தக மந்திரி ஹோவார்டு லுட்னிக் முன்னிலையில் இதற்கான அறிவிப்பில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இதன்பின்பு அவர் கூறும்போது, எங்களுக்கு பணியாளர்கள் தேவை. அதிலும், எங்களுக்கு சிறந்த பணியாளர்கள் தேவை. அதனை இந்த அறிவிப்பு உறுதி செய்யும். அதுவே நடக்க போகிறது. அமெரிக்க பணியாளர்களை நீக்காமல், அதே வேளையில், உண்மையில் மிக திறன் வாய்ந்த நபர்களை நாட்டுக்குள் கொண்டு வருவது உறுதி செய்யப்படும் நோக்கத்தில் இந்த கட்டணம் இருக்கும் என்றார்.

அமெரிக்கர்களிடம் இருந்து வேலைவாய்ப்புகளை பறிக்க முயற்சிப்பதற்கு பதிலாக, இந்த நடவடிக்கை அமையும். இதனால், அமெரிக்க கஜானாவில், கோடிக்கணக்கில் நிதி வந்து சேரும். இந்த நிதியை வரி குறைப்புக்கு நாங்கள்பயன்படுத்தி கொள்வோம். கடன்களையும் அடைப்போம். அது வெற்றியடையும் என நாங்கள் நினைக்கிறோம் என்று கூறினார். இந்த கட்டணம் ஆண்டுக்கு ஒரு முறை என்ற கணக்கில் வசூலிக்கப்படும். இந்த விசாக்கள் 3 ஆண்டுகள் செல்லுபடியாக கூடியவை. அதன்பின்னர், அவற்றை 3 ஆண்டுகளுக்கு புதுப்பித்து கொள்ள முடியும்.

இதேபோன்று தங்க அட்டை எனப்படும் கோல்டு கார்டு திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்துவதற்கான அறிவிப்பில் ட்ரம்ப் கையெழுத்திட்டு உள்ளார். இது, மிக சிறந்த திறன் படைத்த வெளிநாட்டுக்காரர்களுக்கானது. அவர்கள் அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க கஜானாவுக்கு ரூ.8 கோடியே 88 லட்சத்து 91 ஆயிரம் (1 மில்லியன்) செலுத்த கூடிய தனி நபர்களுக்கானது. அல்லது அவர்களுக்காக ஒரு நிறுவனம் ரூ.176 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரம் (2 மில்லியன்) கொடுக்க முன்வர வேண்டும். இதன் பலன் என்னவென்றால், அவர்களுக்கு விசா வழங்கும் பணி விரைவுப்படுத்தப்படும். கிரீன் கார்டும் விரைவில் கிடைக்கும்.

 

எனினும், எச்1-பி விசாவை முன்பே வைத்திருப்பவர்களுக்கும் இந்த கட்டணம் உண்டா? அல்லது புதுப்பிப்பவர்களுக்கு மட்டுமே உண்டா? அல்லது வெளிநாட்டில் இருந்து முதன்முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கு இந்த கட்டணம் உண்டா? என கேட்டதற்கு பதிலளித்த லுட்னிக், புதுப்பிப்பவர்களுக்கோ அல்லது முதன்முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கோ, அதனை நிறுவனமே முடிவு செய்ய வேண்டும். அரசுக்கு இந்த தொகையை செலுத்தும் அளவுக்கு அந்த நபர் மதிப்புடையவரா? அல்லது அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டு அமெரிக்கர் ஒருவரை இந்த பணியில் அமர்த்தலாம் என்பன போன்ற விசயங்களை நிறுவனங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து