முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 போட்டியில் ஒரு ஆண்டில் அதிக வெற்றி: பாகிஸ்தானின் சாதனையை சமன் செய்தது இந்திய அணி

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      விளையாட்டு
Indian-team 2022--09-24

Source: provided

மும்பை : சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற பாகிஸ்தானின் உலக சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. ஒரு வருடத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் 20 வெற்றிகளை பெற்று தற்போது சம நிலையில் உள்ளது.

இந்தியா வெற்றி...

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக கேப்டன் ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி பாகிஸ்தானின் உலக சாதனையை சமன் செய்துள்ளது.

புதிய கேப்டன்...

கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனையடுத்து இந்தியாவுக்கு முழுநேர கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்றார். அவரது தலைமையில் அதன்பின் பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் தோல்வியே அடையாமல் வென்று உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறியது.

சமன் செய்துள்ளது...

இருப்பினும் சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியை சந்தித்து பின்னடைவுக்கு உள்ளான இந்தியா தற்போது சொந்த மண்ணில் வலுவான ஆஸ்திரேலியாவுடன் போட்டி போட்டு வருகிறது. இந்நிலையில் 2-வது டி-20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற பாகிஸ்தானின் உலக சாதனையை சமன் செய்துள்ளது.

டி-20 வெற்றி விவரம்:

1. இந்தியா : 20* வெற்றிகள் (2022).

2. பாகிஸ்தான் : 20 வெற்றிகள் (2021).

3. பாகிஸ்தான் : 17 (2018).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து