முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பது நில அபகரிப்பு நடவடிக்கை : அமெரிக்கா விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2022      உலகம்
America 2022--09-30

Source: provided

வாஷிங்டன் : உக்ரைனின் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைத்து கொள்வது நில அபகரிப்பு நடவடிக்கை என்று அமெரிக்கா விமர்சித்துள்ளது. 

உக்ரைனில் கைப்பற்றிய நான்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்கும் திட்டத்தை ரஷ்யா முன்னெடுத்து வருகிறது.  உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய பிராந்தியங்களை அதிகாரபூர்வமாக தங்கள் நாட்டுடன் இணைத்து கொள்ள ரஷ்யா முடிவு செய்துள்ளதை நில அபகரிப்பு நடவடிக்கை என்று அமெரிக்கா விமர்சித்துள்ளது. 

இது குறித்து அமெரிக்க உள்துறை செயலாளர் ஆனடனி பிளிங்கன் கூறுகையில், சர்வதேச சட்டங்களின் படி ரஷ்யாவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. உக்ரைனில் ரஷ்ய படைகள் வசமுள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களை அதிகாரபூர்வமாக தன்னுடன் இணைத்து கொள்வதை அமெரிக்கா ஒருபோதும் அங்கீகரிக்காது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து