முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். எல்லையை ஒட்டியுள்ள இந்திய மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் : நாட்டு மக்களுக்கு கனடா அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2022      உலகம்
Canada 2022--09-30

Source: provided

ஒட்டாவா : பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இந்திய மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என கனடா தன் நாட்டு மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இது குறித்து, அந்நாடு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்கள் பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்துள்ளன. இந்த மாநிலங்களில், பாகிஸ்தான் நாட்டு எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.

அப்பகுதிகளில் கன்னிவெடி அச்சுறுத்தல் உள்ளது. மேலும், இந்தியா முழுவதும் பயங்கரவாதிகள் எந்நேரமும் தாக்கும் அபாயம் இருப்பதால், கனடா மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக, கனடாவில் இந்தியர்களுக்கு எதிராக குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதையடுத்து அங்கு உள்ள இந்திய மாணவர்கள் உள்ளிட்டோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அறிவித்திருந்தது. இதை மனதில் வைத்து கனடா அரசு இந்த ஆலோசனையை தன் நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து