முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாள்: கவர்னர், முதல்வர் ஸ்டாலின் மரியாதை

ஞாயிற்றுக்கிழமை, 2 அக்டோபர் 2022      தமிழகம்
CM-1 2022-10-02

Source: provided

சென்னை : மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியின் திருவுருவப்படத்திற்கு கவர்னர் ஆர்.என். ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாள் (காந்தி ஜெயந்தி) நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.  இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்பட்டது.

அந்த வகையில், காந்தி ஜெயந்தியையொட்டி சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியின் திருவுருவப்படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காந்தி ஜெயந்தியையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

பேதங்களைக் கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட உழைத்த அண்ணல் காந்தியார் பிறந்த நாளில், சமத்துவமும் சகோதரத்துவமும் இந்த மண்ணில் தழைத்து, வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை; இது காந்திய மண் எனச் சூளுரைப்போம் என குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து