முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பும்ராவுக்கு பதில் மாற்று வீரராக முகமது ஷமி இடம்பெறுவாரா ? பயிற்சியாளர் டிராவிட் பதில்

புதன்கிழமை, 5 அக்டோபர் 2022      விளையாட்டு
Dravid 2022-10-01

டி20 உலகக்கோப்பையில் முகமது ஷமி பும்ராவுக்கு பதிலாக மாற்று வீரராக இந்திய அணியில் இடம்பெறுவாரா என்பது குறித்து அணியின் பயிற்சியாளர் டிராவிட் தெரிவித்துள்ளார்.

16 நாடுகள்...

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 16-ந்தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக 2-வது சுற்றில் விளையாடும்.

முதல் ஆட்டத்தில்...

வெஸ்ட் இண்டீஸ், இலங்கை உள்பட 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடும். இதில் இருந்து 4 அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் 23-ந்தேதி பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவரான பும்ரா காயம் காரணமாக ஆடவில்லை. அவர் உலகக்கோப்பை போட்டியில் இருந்து விலகி உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பும்ரா இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவாகும்.

மாற்று வீரர்கள்...

அவரது இடத்தில் மாற்று வீரர்களான முகமது ஷமி, தீபக் சாஹர் ஆகியோரில் ஒருவர் இடம் பெறலாம். இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பையில் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி இடம் பெறுவாரா? என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் கேட்ட போது அவர் பதில் அளித்தார். இது தொடர்பாக டிராவிட் கூறியதாவது., பும்ராவுக்கு மாற்றாக யார் இடம் பெறுவார் என்பதை ஆலோசித்து வருகிறோம். 

நேரம் உள்ளது...

அக்டோபர் 15 வரை எங்களுக்கு நேரம் உள்ளது. முகமது ஷமி மாற்று வீரர்கள் பட்டியலில் உள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரில் அவர் ஆடவில்லை. அவர் தற்போது தேசிய கிரிக்கெட் அகடாமியின் கண்காணிப்பில் இருக்கிறார். அவர் எப்படி குணமடைந்து வருகிறார் என்பதை அறிக்கை மூலம் தான் தெரியவரும். கொரோனா பாதிப்பு 15 நாட்களுக்கு பிறகு அறிக்கை கிடைக்கும். நாங்கள் ஒரு அழைப்பை விடுப்போம். அவருடைய அறிக்கை கிடைத்தவுடன் எதை எவ்வாறு முன்னெடுத்து செல்வது பற்றி ஆலோசிப்போம். இவ்வாறு ராகுல் டிராவிட் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து