Idhayam Matrimony

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பள்ளிகளுக்கு உத்தரவு

வியாழக்கிழமை, 6 அக்டோபர் 2022      தமிழகம்
Educationa-department 20220-9-25

Source: provided

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளிகளில் மேற்கொள்ள பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யக்கூடும். வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த ஆண்டுகளை விட அதிக புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அந்த அறிக்கையில், திறந்தவெளியில் உள்ள கிணறுகள், இடியும் நிலையில் உள்ள சுவர்கள் ஆகியவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஆழ்துளை கிணறுகள் பாதுகாப்பாக இருப்பதை உறிதி செய்ய வேண்டும். பள்ளி வளாகங்களில் விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும். மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பழுதடைந்த கட்டங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து