முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல் குறித்து ம.நீ.ம. நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை

புதன்கிழமை, 16 நவம்பர் 2022      அரசியல்
Kamal 2022-11-16

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். 

சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் ஓட்டலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

கடந்த முறை செய்த தவறுகளை வரும் நாடாளுமன்ற தேர்தலில் செய்யக் கூடாது என ம.நீ.ம. நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து கூட்டத்தில் பேசினோம். கூட்டணி குறித்து விவாதித்துக் கொண்டு உள்ளோம். இப்போது, விவரிக்க முடியாது. தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்தாலும் தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து