முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் ஒரே நாளில் 85 ஆயிரம் பேர் தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      இந்தியா
Sabarimala 2022-11-27

Source: provided

திருவனந்தபுரம் ; சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.  கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட பிறகு மண்டல பூஜை இந்த ஆண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டதால் பக்தர்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. நாளுக்கு நாள் சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

 ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு போன்றவற்றின் மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் சரியான நேரத்திற்கு வந்தால் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. ஆனாலும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் சூழ்நிலையே அங்கு உள்ளது. 

இதற்கு காரணம் பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பது தான். பக்தர்களின் வசதிக்காக கோவில் நடை திறப்பு நேரத்திலும் தேவஸ்தானம் மாற்றம் செய்துள்ளது. ஆனாலும் பக்தர்களின் காத்திருப்பு தொடரவே செய்கிறது. சபரிமலைக்கு வழக்கமான நாட்களை விட சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. 

நேற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதலே அதிகமாக காணப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களை தவிர, வெளி மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் உடனடி முன்பதிவில் பதிவு செய்ய ஆர்வம் காட்டினர். இதனால் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது.  சபரிமலை வரும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து