முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் புதிதாக 15 ஆயிரம் புதிய வீடுகள் கட்ட நடவடிக்கை : அமைச்சர் அன்பரசன் தகவல்

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      தமிழகம்
Anbarasan 2022-09-19

Source: provided

சென்னை : நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக 15,000 வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.  சென்னையில் மட்டும் 27,538 அடுக்குமாடி குடியிருப்புகள் மக்கள் வசிக்கத் தகுதியற்ற வீடுகளாக உள்ளதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ஆன்டிமானிய தோட்டம், வன்னியபுரம், டாக்டர் தாமஸ் சாலை  , கருமாங்குளம், காமராஜ் காலனி , லலிதாபுரம் ஆகிய திட்டப்பகுதிகளை அமைச்சர் அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையில் மட்டும் 27,538 அடுக்குமாடி குடியிருப்புகள் மக்கள் வாழ தகுதியற்ற வீடுகளாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த தகவலையறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள்  வசிப்பதற்குத் தகுதியற்ற வீடுகளை இடித்து விட்டு அதே பகுதியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி தரவேண்டுமென உத்தரவிட்டார். அதன் அடிப்படையில்  கடந்த நிதி நிலை அறிக்கையில் அறிவித்தபடி ரூ.1200 கோடியில் 7500 வீடுகளும், நடப்பாண்டு ரூ.1200 கோடியில் 7500 வீடுகளும் ஆக மொத்தம் ரூ.2400 கோடி மதிப்பீட்டில் 15,000 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் 10,000 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் 27,538 வீடுகளும் இடிக்கப்பட்டு படிப்படியாக புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும்.

ஏற்கனவே 200 மற்றும் 300 சதுர அடியில்  இருந்த குடியிருப்புகளில் பொதுமக்கள் சிரமப்பட்டு வசித்து வந்தனர்.  அனைவரும் சிரமமின்றி வாழ வேண்டும் என்பதற்காக தற்போது கட்டப்படும் அனைத்து குடியிருப்புகளும்  400 சதுர அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்று முதல்வர்  உத்தரவிட்டுள்ளார். தற்பொழுது கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் 50 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து நிலைத்து நிற்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து