முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 மீட்டர் ஓட்டப்பந்தயம்: சாதனை படைத்த மூதாட்டி

புதன்கிழமை, 30 நவம்பர் 2022      விளையாட்டு
old-woman 2022-11-30

Source: provided

உத்தர பிரதேசத்தின் மீரட்டில் நடந்த மாவட்ட அளவிலான தடகள போட்டியில் 80 வயது பாட்டி ஒருவர் கலந்து கொண்டு பலரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். அதன்படி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை வெறும் 49 நொடிகளில் கடந்து சாதித்துக் காட்டியிருக்கிறார் அந்த பாட்டி. அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், அந்த பாட்டி தன்னைத் தானே உற்சாகப்படுத்திக்கொள்ளும் விதமாக கைகளை தட்டிக் கொண்டே குஷியாக பந்தயத்தில் ஓடத் தொடங்கியவர் ஒரு நொடி கூட எங்கேயும் நிற்காமல் அடுத்த 49வது நொடியில் 100 மீட்டரை கடந்திருக்கிறார். பாட்டி சரியாக இறுதிக் கோட்டை கடக்கும் வரை ஷாருக்கான் நடிப்பில் வந்த சக்தே இந்தியா படத்தின் பாடலை ஒலிக்கச் செய்து அவரை ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள்.

________________

பி.சி.சி.ஐ. மீது பாக். முன்னாள் வீரர் டேனிஷ் குற்றச்சாட்டு

இந்திய அணியில் சாம்சனை ஆட வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சாம்சனுக்கு அணியில் இடம் இல்லை.  இந்த நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேசிரியா சாம்சன் கிரிக்கெட் வாழ்வையும் பிசிசிஐ நிர்வாகம் முடித்து விடும் என்று விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், 2019 உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பாக அம்பத்தி ராயுடு ஒரு நாள் போட்டிகளில் அதிகமான ரன்களை குவித்தார். ஆனாலும் அவர் உலக கோப்பை அணியில் இடம் பெறவில்லை இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தன்னுடைய ஓய்வை அறிவித்தார். இதே போன்ற ஒரு நிலைக்கு தான் சாம்சனையும் பிசிசிஐ நிர்பந்திப்பது போல் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.

________________

ஹர்ஷா கேள்வியால் ரிஷப் பந்த் அதிருப்தி

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சரியாக விளையாடாதது குறித்த கேள்விக்குப் பதில் அளித்துள்ளார் இந்திய விக்கெட் கீப்பர் பேட்டரான ரிஷப் பந்த். நேற்று நடந்த 3-வது ஒருநாள் ஆட்டம் தொடங்கும் முன்பு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்தைப் பிரபல தொகுப்பாளர் ஹர்ஷா போக்ளே பேட்டியெடுத்தார். அப்போது ரிஷப் பந்திடம் அவர் கேட்ட கேள்வி, சேவாக்கிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளேன். இப்போது உங்களைக் கேட்கிறேன். உங்களைப் பார்க்கும்போது வெள்ளைப் பந்து கிரிக்கெட் தான் உங்களுக்குப் பிடித்தமானது எனத் தோன்றுகிறது. ஆனால் உங்களுடைய டெஸ்ட் கிரிக்கெட் சாதனை அதனை விடவும் மேலானதாக உள்ளது என்றார். 

ரிஷப் பந்த்: சார், சாதனைகள் எல்லாம் எண்கள் தான். என்னுடைய வெள்ளைப் பந்துச் சாதனைகளும் மோசமல்ல. போக்ளே (குறுக்கிட்டு): நான் மோசம் எனச் சொல்லவில்லை. அதனை டெஸ்ட் எண்களுடன் ஒப்பிடுகிறேன்.  ரிஷப் பந்த்: ஒப்பிடுவதை என் வாழ்க்கையில் செய்வதில்லை. எனக்கு 24, 25 வயது தான் ஆகிறது. ஒப்பிட வேண்டும் என்றால் எனக்கு 30, 32 வயதாகும்போது செய்யலாம் என்றார். ரிஷப் பந்தின் இந்தப் பதிலுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். ஹர்ஷா போக்ளே சரியான கேள்வியைக் கேட்டபிறகும் இதுபோல பதில் சொல்வதா, டி20 கிரிக்கெட்டிலும் நியூசிலாந்து தொடர்களிலும் மோசமாக விளையாடியுள்ள ரிஷப் பந்த், விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளாமல் பதிலளித்துள்ளார் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

________________

ஒட்டக காய்ச்சல் பரவல் எதிரொலி: கால்பந்து ரசிகர்களுக்கு எச்சரிக்கை

பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த 20-ந்தேதி தொடங்கி வருகிற டிசம்பர் 8-ந்தேதி வரை நடக்கிறது. கால்பந்து போட்டி தொடர் தொடங்கி 10 நாட்கள் ஆன நிலையில், உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் புது எச்சரிக்கையை விடுத்து உள்ளனர். மெர்ஸ் எனப்படும் மத்திய கிழக்கு நாடுகளில் காணப்பட கூடிய சுவாச பாதிப்பு, ஒட்டக காய்ச்சல் என பரவலாக அழைக்கப்படுகிறது. இது, கொரோனாவை விட கொடியது என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். கொரோனா மற்றும் எம்பாக்ஸ் (குரங்கம்மை) உள்ளிட்ட அதிக ஆற்றல் வாய்ந்த தொற்று ஆபத்துகளை ஏற்படுத்த கூடிய 8 பாதிப்பு வகைகளில் ஒட்டக காய்ச்சலும் ஒன்று என சமீபத்திய ஆய்வு அறிக்கை தெரிவித்து உள்ளது. 

அந்த அறிக்கையின்படி, கத்தாரில் 28 பேருக்கு மெர்ஸ் பாதிப்பு (10 லட்சம் பேரில் 1.7 பேருக்கு பாதிப்பு) ஏற்பட்டு உள்ளது என நோய்த்தொற்று அறிவியல் தரவு தெரிவிக்கின்றது. இவற்றில் பலர் ஒட்டகத்துடன் தொடர்புடையவர்கள் என கடந்த கால பதிவு தெரிவிக்கின்றது. மெர்ஸ் தொற்று ஏற்பட கூடிய பேராபத்து உள்ளவர்கள், டிராமெடரி என்ற அதிகம் உயரம் கொண்ட ஒரு வகை ஒட்டகங்களுடனான தொடர்பை தவிர்க்க வேண்டும் என ஆய்வு தெரிவிக்கின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து