முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட அக்னி வீரர்களில் 341 பெண் மாலுமிகள் தலைமை தளபதி தகவல்

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2022      இந்தியா
Indian-Navy 2022 12 03

இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட 3 ஆயிரம் அக்னிவீரர்களில் 341 பெண் மாலுமிகள் உள்ளனர் என இந்திய கடற்படை தலைமை தளபதி தெரிவித்தார். 

இது குறித்து இந்திய கடற்படையின் தலைமை தளபதி ஹரி குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட முதல் தொகுதியை சேர்ந்த 3 ஆயிரம் அக்னிவீரர்களில் 341 பேர் பெண்கள் ஆவர். இந்த 341 பெண்கள் கப்பல் மாலுமிகளாக செயல்படுவார்கள். ஆண்கள் பெறும் அதே பயிற்சி முறைகளை அவர்களும் பெறுவார்கள். கப்பல்கள், விமான தளங்கள், விமானங்களில் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். 

ஒரு மாலுமிக்கு அளிக்க கூடிய அதே பயிற்சி முறைகள் அவர்களுக்கும் வழங்கப்படும். பயிற்சி முறையில் எந்தவித வேற்றுமையும் இருக்காது. ஒரு தனிநபரின் திறமையை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். இதுதவிர, பாலின சமத்துவ கடற்படையாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் பார்க்கிறோம் என்று தெரிவித்தார். 

மேலும் அடுத்த ஆண்டில் இருந்து, அனைத்து பிரிவுகளிலும் பெண் அதிகாரிகளை படையில் சேர்ப்பதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு இருக்கிறோம். இதுவரை 7 முதல் 8 பிரிவுகளில் மட்டுமே அவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர் என்றும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து