முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மழைநீர் வடிகால் பணிகள்: தலைமைச்செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2022      தமிழகம்
iaiyanpu 2022 09 24

Source: provided

செங்கல்பட்டு : மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ள இடங்களை தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

தாம்பரம் மாநகராட்சி குடியிருப்பு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்க 29 இடங்களில் சுமார் 25 கி.மீ. தூரத்திற்கு மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி விரைவில் 89 கோடியே 64 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ள இடங்களை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். அவர்களிடம் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்த தலைமைச் செயலாளர் இறையன்பு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து