முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி: பெட்ரோல், டீசல் விலை ரூ.5 வரை குறைய வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      வர்த்தகம்
Petrol-Diesel 2022 12-06

கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் குறைந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எரிபொருளை 85 சதவீதம் அளவுக்கு வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்வதால் சர்வதேச எண்ணெய் சந்தையில் ஏற்படும் விலை மாற்றம் வெகு விரைவாக இந்தியாவில் எதிரொலிக்கும். பெருமளவு எண்ணெய்யை ஈராக், அரேபியா, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்குகிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் காரணமாக சர்வதேச எண்ணெய் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. பீப்பாய் ஒன்றின் விலை 120 டாலரில் இருந்து 90 டாலராக குறைந்தது.

ஒரு வாரமாக 90 டாலருகே விற்பனை செய்யப்படும் சூழலில் இந்த விலையில் மேலும் வீழ்ச்சி ஏற்படலாம் என்று தெரிகிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முடிவு ஒரு வாரத்திற்குள் எடுக்கப்படலாம் எனவும் தெரிகிறது. கடந்த முறை கலால் வரி குறைக்கப்பட்டதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து