Idhayam Matrimony

உன்னாவ் பலாத்கார வழக்கில் ஜாமீன்: பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

வியாழக்கிழமை, 25 டிசம்பர் 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, உன்னாவ் பலாத்கார வழக்கில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் 17 வயது சிறுமியாக இருந்தபோது பாங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார், கடந்த 2017-ம் ஆண்டில் அவரை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தார் என உள்ளூர் போலீசில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுதொடர்பான வழக்கில், டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளான சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரீஷ் வைத்யநாதன் சங்கர் ஆகியோர் கொண்ட டெல்லி ஐகோர்ட்டு அமர்வு, செங்காருக்கு கடந்த 3 தினங்களுக்கு முன்பு (செவ்வாய் கிழமை) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இளம்பெண் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, ரூ.15 லட்சம் பணம் செலுத்தி விட்டு, ஜாமீன் பெற்று செல்லலாம் என்ற நிபந்தனையின் பேரில் தண்டனையை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது. 

இந்நிலையில், செங்காரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் உள்ள இந்தியா கேட் முன்பு பாதிக்கப்பட்ட இளம்பெண், அவருடைய தாயார் மற்றும் வழக்கறிஞர்-சமூக ஆர்வலரான யோகித பயானா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டபோது, சி.ஆர்.பி.எப். போலீசார் அவர்களை கைது செய்து பஸ்சில் அழைத்து சென்றனர். 

இந்நிலையில், டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை பெற்றதும், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இதன்படி, எஸ்.எல்.பி. எனப்படும் சிறப்பு விடுமுறை மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய சி.பி.ஐ. முடிவு செய்திருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டுக்கு, இந்த சிறப்பு அதிகாரம் ஆனது அரசியலமைப்பால் வழங்கப்பட்டு உள்ளது. இதனால், எந்தவொரு கோர்ட்டு அல்லது தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து