முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: முதல் நாளில் ஆஸி., 330 ரன்கள்

வியாழக்கிழமை, 8 டிசம்பர் 2022      விளையாட்டு
8-Ram-58-1

Source: provided

அடிலெய்டில் நடைபெற்று வரும் பகலிரவு டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. வார்னர் 21 ரன்களுக்கும் கேப்டன் ஸ்மித் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்கள். உஸ்மான் கவாஜா 62 ரன்கள் எடுத்தார். லபுஷேன், டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி சதமெடுத்தார்கள். லபுஷேன் 186 பந்துகளிலும் ஹெட் 125 பந்துகளிலும் தங்களுடைய சதத்தைப் பூர்த்தி செய்தார்கள். 

முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி, 89 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்துள்ளது. லபுஷேன் 120, ஹெட் 114 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். முதல் டெஸ்டை 164 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது ஆஸ்திரேலிய அணி.

________________

குஜராத்தில் கிரிக்கெட் வீரர் 

ஜடேஜா மனைவி வெற்றி

குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் 182 தொகுதிகளில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக ரிவாபா ஜடேஜா களமிறக்கப்பட்டிருந்தார். இவரின் கணவரும் கிரிக்கெட் வீரருமான ரவீந்திர ஜடேஜா பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், பாஜக வேட்பாளர் ரிவாபா ஜடேஜா காலை முதல் முன்னிலை வகித்தார். ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 56.75 சதவிகிதத்தை இதுவரை ரிவாபா பெற்றுள்ளதால் வெற்றி உறுதியாகியுள்ளது. இவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் 23 சதவிகிதம், காங்கிரஸ் வேட்பாளர் 15 சதவிகிதம் வாக்குகளை பெற்றுள்ளனர்.

________________

வங்கதேச ஏ அணிக்கு எதிரான டெஸ்ட்:

இந்திய 'ஏ' அணி 562 ரன்கள் குவிப்பு

இந்திய ஏ அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு அதிகாரபூர்வமற்ற டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டிரா ஆனது. 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாரின் அபாரமான பந்துவீச்சில் வங்கதேச பேட்டர்கள் தடுமாறினார்கள். வங்கதேச ஏ அணி, 80.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய ஏ அணி, 2-வது நாள் முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்தது. கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 144, ஜெயந்த் யாதவ் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

நேற்று, அபிமன்யு ஈஸ்வரன், 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய ஏ அணியின் கீழ்நடுவரிசை மற்றும் கீழ்வரிசை பேட்டர்கள் அபாரமாக விளையாடி இந்திய அணி 550 ரன்களைத் தாண்ட உதவினார்கள். ஜெயந்த் யாதவ் 83, செளரப் குமார் 55, நவ்தீப் சைனி 50, முகேஷ் குமார் 23 ரன்கள் எடுத்தார்கள்.  இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 147.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 562 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

________________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து