முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல்: 3 தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 13 பேர் மீது வழக்கு

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2022      தமிழகம்
Sasikala-Pushpa-2022 12 23

முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல் நடத்தியதாக 3 தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பா.ஜனதா மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சசிகலா புஷ்பாவின் வீடு தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் உள்ளது. நேற்று முன்தினம் மதியம் இவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிள் மற்றும் 2 ஆட்டோக்களில் 15 பேர் கொண்ட கும்பல் வந்தது. திடீரென அந்த கும்பல் வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி தாக்கினர். இதில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.மேலும் ஜன்னல், பூந்தொட்டி, பிளாஸ்டிக் நாற்காலிகளையும் அந்த கும்பல் சூறையாடியது.

தாக்குதலின்போது சசிகலா புஷ்பா வீட்டில் இல்லை. 3 நாட்களுக்கு முன் தூத்துக்குடியில் பா.ஜனதா சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற பின்னர் அவர் நாகர்கோவிலுக்கு சென்று விட்டார். தாக்குதல் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா பேச்சாளர் பிரிவு தலைவர் ரத்தினராஜ் என்பவர் சிப்காட் போலீசில் புகார் செய்துள்ளார்.

அதன்பேரில், சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல் நடத்தியதாக தி.மு.க. கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், இசக்கிராஜா, பெண கவுன்சிலர் அதிர்ஷ்டமணி மற்றும் அவரது கணவர் பகுதி செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட 13 பேர் மீது சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி இந்திய தண்டனை சட்டம் 427, 506/2 உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து