முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழகம் வருகிறார்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2022      இந்தியா
JP-Natta-2022 12 23

Source: provided

சென்னை : பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழகம் வருகிறார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 98-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் வாஜ்பாயின் உருவப்படத்துக்கு தமிழக பா.ஜ.க. மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் பா.ஜ.க.வினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், நடிகை மதுவந்தி உள்ளிட்டோரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து சுதாகர் ரெட்டி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்திலோ நடந்து வரும் தி.மு.க. ஆட்சி, குடும்பத்துக்காக குடும்பத்தால் நடத்தப்படும் ஆட்சியாக இருக்கிறது. குண்டாயிசம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. கடந்த முறை ஊழலால் தரமற்ற பொங்கல் பொருட்களை இந்த ஆட்சி மக்களுக்கு வழங்கியது. ஆனால் இந்த முறை கரும்பு கூட இல்லாத பொங்கல் பரிசை வழங்க முடிவு செய்திருக்கிறது.

அ.தி.மு.க.வில் என்ன பிரச்சினை இருந்தாலும் அவர்கள் எங்கள் நண்பர்கள். கட்சியை வலுப்படுத்தும் வகையில் 27-ந்தேதி (இன்று) பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வருகிறார். குறிப்பாக பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார்களும், வழக்குகளும் உள்ளன. அவர் பதவி விலகியிருக்க வேண்டும். அவரும் விலகவில்லை. முதல்-அமைச்சரும் அவரை பதவியிலிருந்து நீக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து