முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மர்மமான முறையில் ஒடிசா ஓட்டலில் ரஷ்ய தொழிலதிபர் உயிரிழப்பு

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2022      இந்தியா
Odisha-Hotel 2022-12-27

ரஷ்யாவைச் சேர்ந்த தொழிலதிபரும் மக்கள் பிரதிநிதியுமான பவெல் ஆன்டோவ், ஒடிசாவுக்கு சுற்றுலா வந்திருந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்தார்.

ரஷ்யாவின் விளாடிமிர் மகாண மக்கள் பிரதிநிதிகளான விளாடிமிர் புதானோவ், பவெல் ஆன்டொனோவ் உள்ளிட்ட 4 பேர் கடந்த வாரம் இந்தியா வந்துள்ளனர். இவர்கள் ஒடிசாவில் ராயகடா என்ற பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் அறைகள் எடுத்து தங்கி உள்ளனர். கந்தமால் மாவட்டத்தில் உள்ள தரிங்பாடி என்ற இடத்திற்கு கடந்த 21-ம் தேதி சுற்றுலா சென்றுவிட்டு பிறகு அறைக்கு திரும்பி உள்ளனர். மறுநாள் காலை விளாடிமிர் புதானோவ் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பவெல் ஆன்டொனோவ் டிச. 25-ல் தான் தங்கி இருந்த 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் பவெல் ஆன்டொனோவின் உடல் நேற்று எரியூட்டப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த ஷர்மா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து